Jump to content
नव आचार्य श्री समय सागर जी को करें भावंजली अर्पित ×
मेरे गुरुवर... आचार्य श्री विद्यासागर जी महाराज
  • छोटे बाबाजी की जीवन गाथा


    Padma raj Padma raj

    सम्यक दर्शन । सादर प्रणाम!   तमिलनाडु के  पोन्नूरमलै  मे  स्थित  श्री विसाकाच्चार्य तपोवन  से  श्री  श्रुतकेवली मासिक धर्म पत्रिका मे  हमारे संत सिरोमणि आचार्य श्री विद्यासागर महाराज जी की जीवन गाथा तमिल मे आ रही है ।

    சோட்டே பாபா.pdf 1.pdf

     

     

     

    சோட்டே பாபா...

    வாழ்வியல்

    சோட்டே பாபா காலச் சக்கரத்தின் ஓட்டத்தை காலனாலும் கடக்க முடியாது. காலதேவனும், கர்மமும் சோட்டே பாபாவின் உள்ளத்திலும், உடலிலும் பல இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தின. பல நூறு பிறவிகளுக்கு முன்னால் ஆன்மனில் விதைக்கப்பட்ட ஸத்தர்ம விதையானது வேர் பிடிக்கத் தொடங்கியது. ஆம்! சோட்டே பாபா ஆன்ம பாதையில் பய ணிக்க பல ஏதுவான தருணங்கள் அகக் கண்களில் நிழலாடின. இகலோக வாழ்வில் பல ரசவாத வித்தையை நிகழ்த்த மனம் என்னும் மானசீக குரு பஞ்ச மந்திரத்தை பகடையாய் பயன்படுத்தியது. விதி யென்னும் வினைத் தேரில் மதியென்னும் சாட்டை கொண்டு, அகிம்ஸை என்னும் வீதியில் பயணிக்க ஆன்மன் சோட்டே பாபாவின் மனதிலே அச்சாரம் பொருந்தியது. அகிலத்தில் பல மாற்றங்களை செய்யப் போகும் பாபாவின் மனத்திலும், உடலிலும் ஏற்படும் மாற்றங் களை பாபாவும் அறியவில்லை , ஸதலகாவும் அறியவில்லை . என்ற வர்களின் இதயத்தில் மட்டும் ஏதோ பொறி தட்டியது. எனினும் அதை அவர்கள் பெரிதுபடுத்தவில்லை .

    மல்லப்பாஜிக்கு இருந்த ஒரே கவலை அடுத்த ஆண்டு தோத்தா -வை எட்டாம் வகுப்பு படிக்க எப்படி வெளியூருக்கு அனுப்புவது? என்பது தான். யாருடன் அனுப்புவது? பேருந்தில் அனுப்புவதா? மிதிவண்டி கொடுத்து அனுப்புவதா? பச்சிளம் குழந்தையை பஸ்ஸில் அனுப்பவும் மனம் இல்லை. மிதிவண்டி கொடுத்து அனுப்பவும் மனம் இல்லை. ஆனால் பீலூ படித்தாக வேண்டும் போன்ற சிந்தனையில் மூழ்கி இருந்தார். பீலூவோ எதைப் பற்றியும் கவலையில்லாமல் தன் கடமைகளில் முழு கவனம் செலுத்தி வந்தார். விளையாட்டு, படிப்பு, தர்மம், கேரம்போர்டு, ஓவியம், சதுரங்கம், கில்லி, சூர்பால், நீச்சல், கரீஷ்மாவில் சுற்றுவது (மிதிவண்டியின் பெயர்) என எதையும் விட்டு வைக்கவில்லை. போதாகுறைக்கு அன்னையிடம் அங்கலாய்த் தல். இந்நிலையில்தான் சோட்டே பாபாவிற்கு ஆன்மீகத்தில் கவனம் முழுமையாக திரும்பியது. ஸதலகாவிலும், அருகாமையிலும் பல முனிவர்கள் வருகை புரிந்தனர். முனிகளின் அறச்சொற்பொழிவில் ஆழ்ந்து விடுவார் சோட்டேபாபா.

    முனிகளுக்கு பணிவிடை செய்வார். ஒரு சமயம் ஆச்சார்யஸ்ரீ தேஷ்பூஷண் மகராஜ் ஸதலகாவிற்கு வருகை புரிந்து இருந்தார். தென்னிந்திய பழக்கப்படி மூஞ்சிபந்தன்; அதாவது உபதேசம் கொடுத்து உபநயனம் செய்வார்கள். அன்றைய தினம் உபதேசம் பெறுகிற வர்கள் சிகையை சீர் செய்து, குடுமி வைத்து, வேட்டி கட்டிக் கொண்டு,

    சுருத கேவலி

    டிசம்பர் 2017

    27

    சோட்டே பாபா .....

    வாழ்வியல்

    வீடு வீடாகச் சென்று பிக்ஷை பெற வேண்டும். அவ்வாறு பெறப்படும் பிக்ஷையை கொண்டு சமைத்து உண்ண வேண்டும். அதைத் தவிர வேறு கிடையாது. ஜினாலயத்தில் தங்க வேண்டும். கிராமத்தில் உள்ள 12 - 14 வயதுடைய சிறுவர்களுக்கு இவ்வாறு செய்வார்கள். ஆச்சார்ய ஸ்ரீ தேஷ்பூஷண்ஜி வருகையால் மூஞ்சிபந்தன் நிகழ்வை நடத்த வேண்டும் என முடிவு செய்து இருந்தார்கள். தானும் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தார் சோட்டே பாபா. ஆனால் மல்லப்பாஜி அதற்கு இசைவு கொடுக்கவில்லை. அன்னையும் அமைதி காத்தார் கள். சகோதரர் குழப்பத்தில் இருந்தார். ஆன்ம துணிவு கொண்ட மகான் எதையும் பொருட்படுத்தவில்லை . தர்மசபையில் முதல் ஆளாக எழுந்து நின்றார். தோத்தா எழுந்த நின்றதைப் பார்த்த தோழர்களும் எழுந்து நின்றார்கள். தோத்தாவை குழந்தையாகவே கருதுகின்ற மல்லப்பாஜியின் மனம் வாடியது. பீலூவுக்கு இன்னும் வயது வரவில்லை , இன்னும் சில ஆண்டுகள் கழித்து மூஞ்சிபந்தன் செய்யலாம் எனக் கருதி இருந்தார். பீலூவின் பிடிவாதத்திற்கு முன்னால் மல்லப்பாஜி வாயடைந்து போனார். ஒரு வழியாக மங்கள் கரமாக மூஞ்சிபந்தன் விழா தொடங்கியது. ஆச்சார்யஸ்ரீ தேஷ் பூஷண்ஜி முதன்மையாக பீலூவை அழைத்தார். ஜினாலய (

    பண்டிதர்) உபாத்தியாயர் வித்யாதருக்கு பொன்பூநூலை கொடுத்தார். தோத்தா மகிழ்ந்து, மிகுந்த பணிவுடன் பெற்றுக் கொண்டார். சிராவகர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள், தோத்தாவின் பெற்றோர்களும் மகிழ்ந்தார்கள்.

    இந்நிலையில் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இனி நகரத் திற்குச் சென்று படிக்க வேண்டும். மல்லப்பாஜிக்கு தோத்தா மிதிவண்டி யில் சென்று படித்து வர விருப்பம் இல்லை, பாதையும் சரியில்லை , வாகனங்கள் வரும் - போகும். எனவே யோசனையில் இருந்தார். உயர்நிலைப்பள்ளியோ ஸதலகாவில் இருந்து நான்கைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உன்னால் மிதிவண்டியில் சென்று வர முடியுமா? என்று கேட்டார். தோத்தாவோ சென்று வர முடியும், எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்ட வரும் என்றார். கடைசியில் ஒருவாறாக மனதை தேற்றிக் கொண்டு மல்லப்பாஜி தோத்தாவின் நண்பர்களுடன் மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்றுவர அனுமதி அளித்தார். தோத் தாவும் சக நண்பர்களுடன் மிதிவண்டியில் சென்று படிக்கத் தொடங்கி னார். உயர்நிலைப் பள்ளியல் சேர்க்கை பெறும் வரை தோத்தா தன் ஆட்டம் - பாட்டத்தை குறைத்துக் கொண்டார். வெளியே சுற்றுவ தில்லை , கில்லி, சூர்பால், கபடி, நீச்சல், நண்பர்களுடன் சுற்றுவது

    சுருத கேவலி

    28

    டிசம்பர் 2017

    சோட்டே பாபா.....

    வாழ்வியல்

    போன்ற அனைத்தையும் குறைத்துக் கொண்டு வீட்டிலேயே கேரம், சதுரங்கம், தர்ம புத்தகம், ஓவியம் போன்றவற்றில் காலம் கழித்து வந்தார். பள்ளியில் சேர்ந்த சில நாட்களில் மீண்டும் அனைத்திலும் ஈடுபட ஆரம்பித்து விட்டார்.

    ஒருநாள் மல்லப்பாஜி வியாபார நிமித்தமாக நகரத்திற்குச் சென்று இருந்தார். கடைவீதியில் தனது வேலையை முடித்துக் கொண்டு ஸதல்காவிற்கு திரும்ப எத்தனித்தார். வழியில் தோத்தாவைப் பார்த் தார், அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். தோத்தா கரீஷ்மாவில் (சைக்கிள்) கைப்பிடியைப் பிடிக்காமல், கையைவிட்டு விட்டு வேகமாக ஓட்டி வந்தார். நகரத்தின் கடைவீதியில் மிதிவண்டியை இயக்குவதே கடினம், தோத்தாவோ வேகமாக ஓட்டுகிறார். அதுவும் இரு கைகளை யும் பிடிக்காமல் ஓட்டுகிறார். இதைக் கண்டுதான் மல்லப்பாஜி வெகுண்டு போனார். ஒரு பக்கம் மகிழ்ச்சி, ஒரு பக்கம் பயம். இரண்டின் பீதியோடு ஸதலகா விரைந்தார். இங்கும் - அங்குமாக நடந்து கொண்டு இருந்தார். தோத்தாவின் வருகைக்கு காத்திருந்தார். அன்னை ஸ்ரீமந்தி அஷ்டகேயின் மனதில் ஏதோ இன்றைக்கு பூகம்பம் இருக்கிறது எனத் தோன்றியது. தோத்தாவின் சகோதர - சகோதரிகள் அமைதி காத்து, அவரவர் பணிகளை செய்து கொண்டு இருந்தனர். மல்லப்பாஜியோ நிமிடத்திற்கு ரு முறை தோத்தா வரவில்லை? எனக் கேட்டுக் கொண்டே இருந்தார். வாயு தேவனுடன் உறவாடி பறந்து வந்த தோத்தா இல்லத்து வாயில்படியில் மிகுந்த உற்சாகமாய் அடி யெடுத்து வைத்துக் கொண்டே அம்மாஜி! என குரல் கொடுத்தார். எத்தனை கோபமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் தோத் தாவின் குரல் கேட்ட மாத்திரத்திலேயே தணிந்து விடும். மல்லப்பா ஜியோ இம்முறை இடிஅமினாக எழுந்தார். வீட்டின் அமைதியை கண்டதும் தோத்தா புரிந்து கொண்டார். யாரோ அப்பாஜியை கோபப்படுத்தி உள்ளார்கள். நாம் சரி செய்து விடலாம் என் மனதில் வியூகம் வகுத்தார். அப்பாஜியின் முகத்தைப் பார்த்தார். எள்ளு விதைத்தால் பொறிந்து விடும் நிலையில் மல்லப்பாஜியின் முகம் இருந்தது. தோத்தா இனிமையான குரலில் அப்பாஜி! என்றழைத்தார். அவ்வளவு தான், பூகம்பம் வெடித்தது. நீ நாளையில் இருந்து பள்ளிக்கு போக வேண்டாம். பாட புத்தகத்தையும், மிதிவண்டியையும் ஓரங்கட்டிவிட்டு விவசாயத்தைப் பார்! என்றார் அப்பாஜி. தோத்தா விதிர்விதித்துப் போனார். காரணம் காரியம் இல்லாமல் அப்பாஜி இவ்வாறு ஏன் கூறுகிறார்? என வியப்பில் ஆழ்ந்தார்.

    - சோட்டே பாபாவின் பெருமைகள் வளரும்.....

    - கெளதமன். கருத கேவலி

    டிசம்பர் 2017

    29


    User Feedback

    Recommended Comments

    There are no comments to display.



    Create an account or sign in to comment

    You need to be a member in order to leave a comment

    Create an account

    Sign up for a new account in our community. It's easy!

    Register a new account

    Sign in

    Already have an account? Sign in here.

    Sign In Now

×
×
  • Create New...